ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் ஆலோசணை கூட்டம் : காயல் அப்பாஸ் பேட்டி !
October 11, 2019
திருச்சியில் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் தலைமையில் ஆலோசணை கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்புரை. மாநில தலைவர் காயல் அப்பாஸ். முன்னிலை. மாநில செயலாளர் கே. அயூப்கான். வரவேற்புரை மாவட்ட செயலாளர் அப்துல் ரசாக். நன்றியுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏ . ஜாஹிர் உசேன் . மற்றும் நிர்வாககள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
நான்குநேரி, விக்கிரவாண்டி, இடைதேர்தலில் அ திமுகவுக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் ஏற்கனவே ஆதரவு கொடுத்துள்ளோம் இரண்டு தொகுதியிலும் வெற்றிக்காக ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் பொறுப்பாளர்கள் களமிறங்கி அபார வெற்றிக்கு பாடுபடுவோம்.
தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை பற்றி தவறான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது தமிழ்நாடு காவல் துறை இயக்குநர் அ வர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இஸ்லாமியர்களின் சொத்துகளை பாதுகாக்கும் தமிழ்நாடு வக்பு வாரியம் கலைக்கபட்டு ஒரு மாதம் கடந்து விட்டது தமிழக அரசு விரைந்து வக்பு வாரியநிர்வாகத்தை புதியதாக அமைத்து வக்பு சொத்தை முறையாக பாதுகாக்க வேண்டும்.
திருச்சி தென்னூர் பகுதியில் மகப்பேறு அரசு மருத்துவமணை அமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் மனு கொடுக்கபட்டது விரைந்து நடவடிக்கை எடுக்கும் மாறு கேட்டு கொள்கிறோம், தாமதிக்கும் பட்சத்தில் கவணஈர்ப்பு ஆர்பாட்டம் நடை பெறும்